தென்காசி ஆகாஷ் ப்ரண்ஸ் ஐஏஎஸ் அகாடமி இந்திய அரசியலமைப்பு முகவுரை உறுதி மொழி ஏற்பு விழா.!
தென்காசி
தென்காசி ஆகாஷ் ப்ரண்ஸ் ஐஏஎஸ் அகாடமி இந்திய அரசியலமைப்பு முகவுரை உறுதி மொழி ஏற்பு விழா
தென்காசி நவ 27
தமிழகத்தில் புகழ் பெற்ற தென்காசி ஆகாஷ் ப்ரண்ஸ் ஐஏஎஸ் அகாடமி மற்றும் தென்காசி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு தென்னக ரயில்வே தென்காசிஇணைந்து இந்திய அரசியலமைப்பு தினத்தில் முகவுரை உறுதிமொழி ஏற்பு விழா நடத்தினர். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 26.11.1949-ம் தேதி அரசியலமைப்பு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந் நாளில் பள்ளி, கல்லூரி மாணவர் களிடத்திலும், பொது மக்களிடத்திலும் அரசியலமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்காசி ரயில்வே நிலையம் வளாகத்தில் ஆகாஷ் அகாடமி சார்பில் விழா எடுக்கப்பட்டது.


இவ் விழாவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், மாவட்ட சமூகநலன் அலுவலர் மதிவதனா, சிறார் நீதிவாரிய உறுப்பினர் வேல்ராஜா, தென்காசி குழந்தைகள் நலக்குழு தலைவர் விஜயாராணி, தென்காசி ரயில் நிலைய மேலாளர் கணேசன், கோட்ட வணிக ஆய்வாளர் ரமேஷ், செங்கோட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தென்காசி ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன் மற்றும் பொது மேலாளர் செந்தில் குமார் ஆகியோர் சிறப்பு விருந்திகனர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். விழாவில் அகாடமி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் என 500க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசும் போது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், அரசியலமைப்பு சட்டம், இந்திய மக்களுக்கு அளிக்கும் உரிமைகள், கடமைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்தும் மாணவர் களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் சிறப்புரை ஆற்றினர்.தொடர்ந்து மாணவர்கள் இந்திய அரசியலமைப்பு தினத்தின் முகவுரையை படித்து உணர்ந்து பார்க்காமல் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் தென்காசி ஆகாஷ் ஐ ஏ எஸ் அகாடமி சார்பாக பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் முகவுரை உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
