இலஞ்சி பேரூர் திமுக சார்பில் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு தினம் .!
தென்காசி

இலஞ்சி பேரூர் திமுக சார்பில் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு தினம்
தென்காசி ஆகஸ்ட் 7
தென்காசி மாவட்டம், இலஞ்சி பேரூர் திமுக சார்பில் இலஞ்சி பேருந்து நிறுத்தம் அருகில் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இலஞ்சி பேரூர் திமுக செயலாளரும்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான முத்தையா தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவரும்,இலஞ்சி பேரூர் மகளிரணி தலைவருமான சின்னத்தாய் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார் பாண்டியன், சண்முகநாதன், சுடலையாண்டி, ஒன்றிய பிரதிநிதிகள் கணேசமூர்த்தி, தேவி வார்டு செயலாளர்கள் செல்லப்பா, சிவக்குமார், ராஜ், பூதத்தான், வசந்தகுமார், செண்பகம், காளிராஜ், ராஜேந்திரகணேஷ் இசக்கி, ரகுபதி, ராமசுப்பிரமணியன் பரதன் சக்திவேல் மாயா, துரைராஜ் ராமசாமி என்ற வெங்கட் ராமகிருஷ்ணன், பண்டாரம் இளைஞர் அணி கார்த்திக் மருத்துவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்