செங்கோட்டை நவீன எரிவாயு எந்திரம் பழுது நீக்க கோரி பாமக துணைத் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை .!

தென்காசி

செங்கோட்டை நவீன எரிவாயு எந்திரம் பழுது நீக்க கோரி பாமக துணைத் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை .!

செங்கோட்டை நவீன எரிவாயு எந்திரம் பழுது நீக்க கோரி பாமக துணைத் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை 

 தென்காசி அக் 24

 தென்காசி மாவட்டம் செங்கோட்டை நவீன எரிவாயு எந்திரத்தை பழுது நீக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஐயம்பெருமாள் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார் அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்
பதாவது, 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள நவீன எரிவாயு தகன எந்திரம் பழுது ஏற்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் சரிசெய்யப் படவில்லை.இதனால் செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதி பொது மக்கள் மிகவும் சிரமப் படுகிறார்கள். இந்த எரிவாயு தகன நிலையம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் பல முறை பழுது ஏற்பட்டுள்ளது.

தரம் குறைந்த எரிவாயு எந்திரம் மூலம் இந்தப் பழுது ஏற்படுகிறது என பொதுமக்கள் கூறி வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் எரிவாயு தகனம் அமைக்க செலவழிக்கப்பட்ட பணம் முறையாக செலவழிக்கப் பட்டுள்ளதா? மேலும் தரமான எரிவாயு தகனஎந்திரம் தானா? என்பதை ஆய்வு  செய்து எரிவாயு தகன எந்திரத்தை உடனே பழுது நீக்கி பொது மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் படி  கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் 

AGM கணேசன்