சிவகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.!

தென்காசி

சிவகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.!

சிவகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா

தென்காசி டிச 09


தென்காசி மாவட்டம் சிவகிரியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓபிசி மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தியின் எழுபத் தொன்பதாவது பிறந்த நாள் விழா சிவகிரி நகர காங்கிரஸ்  தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம்  தலைமையிலும்

தொகுதி ஓபிசி தலைவர் காந்தி   வட்டார காங்கிரஸ் கலை பிரிவு தலைவர் டெல்லி கணேசன்  வட்டார காங்கிரஸ் செயலாளர் உலகநாதன் நகர இலக்கிய அணி தலைவர் அசோக்  நகர செயலாளர்  ஆறுமுகம்  ஆகியோர் முன்னிலையிலும் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நகர ஓபிசி தலைவர் மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார். தென்காசி மாவட்ட ஓபிசி தலைவரும் மாநில  பொதுக்குழு உறுப்பினருமான திருஞானம்  பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்  நகர காங்கிரஸ் நிர்வாகிகள்  நாட்டாமை மாணிக்கம், வேலுச்சாமி, இருதயராஜ், லட்சுமணன், மாடசாமி, சந்திரன், நடராஜ தேவர், ராசு,கண்ணன்,  பிலால் ராமசுந்தரம் மற்றும்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நகர  செயலாளர் வெள்ளைச்சாமி  நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM. கணேசன்