மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நிதி உதவி .!
தென்காசி

மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நிதி உதவி
தென்காசி, ஜூலை 5
ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ சார்பில் மனவளர்ச்சி குன்றிய மாணவ மாணவி களுக்கு ரூபாய் 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி பிஷப் சார்ஜன் மனவளர்ச்சி குன்றிய மாணவ மாணவிகள் குற்றாலம் ராக்ஹால் சர்ச் வளாகத்திற்கு வந்தபோது அவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ சார்பாக ரூபாய் 15,000 வழங்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ தலைவர் தலைவர் என். வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் ஜேம்ஸ் முன்னாள் துணை ஆளுநர் முருகன் ராஜ் மற்றும் முரளிதரன் முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் உறுப்பினர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ செயலாளர் முத்துக்குமாரசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்