கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட மூன்று சட்ட தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை போட்டியிட வேண்டும் என மனு. !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட மூன்று சட்ட தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை போட்டியிட வேண்டும் என மனு. !

கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட மூன்று சட்ட தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை போட்டியிட வேண்டும் என்று முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி தனது விருப்ப மனுவினை கொடுத்தார்.

தமிழகத்தில் வருகின்ற மே மாதம்  நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது தொகுதிக்கான விருப்ப மனுவினை சென்னை சத்திய மூர்த்தி பவனில் கொடுக்கலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட  காங்கிரஸ் கட்சியினர் தங்களது விருப்ப மனுவினை கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய மூன்று சட்ட மன்ற தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில்  காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக   தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை போட்டியிட வேண்டும் என்று சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாநில பொதுச் செயலாளரிடம், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் துரை என்ற துரைசாமி தனது விருப்ப மனுவை வழங்கினார். மேலும் இதேபோல் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட  முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது வட்டாரத் தலைவர் கிருஷ்ணன், சோனியா வாய்ஸ் ஆசிரியர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விமலன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ