விவசாயம் செய்து வந்த நிலத்தில் வருவாய் துறையினர் தென்னங்கன்றுகளை சேதப்படுத்திய இடத்தில் மீண்டும் தென்னங்கன்றுகளை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நடவு செய்தார்.!
கிருஷ்ணகிரி

கே.பாப்பாரப்பட்டியில் விவசாயம் செய்து வந்த நிலத்தில் வருவாய் துறையினர் தென்னங்கன்றுகளை சேதப்படுத்திய இடத்தில் மீண்டும் தென்னங்கன்றுகளை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நடவு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கே.பாப்பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சம்பத் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த நிலத்தினை அரசுக்கு சொந்தமான நத்தம் புறம் போக்கு நிலம் இதில் யாரும் விவசாயமும் செய்யக்கூடாது, யாரும் குடியிருக்கக் கூடாது என கூறி வருவாய்துறையினர் தென்னைமரச்செடிகள் மற்றும் குடிசைகளை சேதப்படுத்தி சென்றனர்,
இதனால் பாதிக்கப்பட்ட சம்பத் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோரின் குடும்பத்தினர் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் அவர்களை நேரில் சந்தித்து புகார் கொடுத்ததை அடுத்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து வருவாய் துறையினரால் தென்னங்கன்றுகள் அகற்றப்பட்ட இடங்களில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் சம்பத் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் தென்னங்கன்றுகளை நடவு செய்தார்.
இது குறித்து பேசிய டாக்டர் சந்திரமோகன்....
கடந்த பல தலைமுறைகளால் நத்தம் புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில் திடிரென வருவாய் துறையினர் குடிசை மற்றும் தென்னங்கன்றுகளையும் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடமும் புகார் கொடுக்கப்பட்டுளது.
தற்போது அகற்றப்பட்டுள்ள இடத்தில் மீண்டும் தென்னை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ