முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ்,வீடு தேடி சென்று குடிமைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் வழங்கினர் .!
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் "முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 78 வயதுடைய ஐ.அமேலோர் பவம் என்பவருக்கு "முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், குடிமைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் வழங்கினர்.
உடன், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், நகரமன்ற தலைவர் திருமதி.பரிதா நவாப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
