சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஜூடோ போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.!

கிருஷ்ணகிரி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஜூடோ போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஜூடோ போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிரதீப்  (தங்கப் பதக்கம்), சரண்  (தங்கப் பதக்கம்), ஹேமந்த்  (வெண்கலப் பதக்கம்), நவநீதன்  (வெண்கலப் பதக்கம்) உள்ளிட்ட நான்கு மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கங்களுடன் இன்று நேரில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாணவர்கள் மென்மேலும் உலக அளவில் உயர்ந்து பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டிற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று  தே. மதியழகன் அவர்கள் வாழ்த்தினார்.

செய்தியாளர்

மாருதி மனோ