ஊத்தங்கரையில் தற்போது இயங்கி வரும் பத்து மகளிர் விடியல் பயணம் செய்யும் நகரப் பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வழித்தடம் நீட்டிப்பு.!
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் (ம) ஊத்தங்கரையில் தற்போது இயங்கி வரும் பத்து மகளிர் விடியல் பயணம் செய்யும் நகரப் பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வழித்தடம் நீட்டிப்பு/மாறுதல் செய்து இயக்க உள்ள பேருந்து வழித்தடங்கள்

1. கிருஷ்ணகிரி – காரிமங்கலம் (K08A) செல்லும்
பேருந்தினை காவேரிப்பட்டிணம் வழியாக இயக்குதல்.
2. கிருஷ்ணகிரி – ஏர்ரசீகலஹள்ளி(K27) செல்லும் பேருந்தினை காவேரிப்பட்டிணம் வழியாக இயக்குதல்.
3. கிருஷ்ணகிரி – பெரியசக்னாவூர்(K32) செல்லும் பேருந்தினை மகாராஜாகடை வழியாக செல்லுமாறு வழித்தடம் மாற்றி இயக்குதல்,
4. கிருஷ்ணகிரி –வேப்பனப்பள்ளி (K53) செல்லும் பேருந்தினை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக செல்லுமாறு வழித்தடம் மாற்றி இயக்குதல்.
5. கிருஷ்ணகிரி – தொப்படிக்குப்பம் ( K61)செல்லும் பேருந்தினை அஞ்சூர் வழியாக இயக்குதல்.
6. ஊத்தங்கரை – கருங்கல்பாடி (U02)செல்லும் பேருந்தினை அத்திப்பாடி , நீப்பத்துறை ஊருக்குள் சென்று வருமாறு இயக்குதல்.
7. ஊத்தங்கரை- அக்ரஹாரம் (U06) செல்லும் பேருந்தினை தீர்த்தமலை வழியாக இயக்குதல்.
8. ஊத்தங்கரை- பெருமாள்நாயக்கம்பட்டி(U07) செல்லும் பேருந்தினை கல்லாவி வழியாக செல்லுமாறு வழித்தடம் மாற்றி இயக்குதல்.
9. ஊத்தங்கரை- குன்னத்தூர்(U14) செல்லும் பேருந்தினை சாமல்பட்டி ஊருக்குள் சென்று வருமாறு ஊருக்குள் சென்று வருதல்
10. திருப்பத்தூர் – பர்கூர் (T89)
செல்லும் பேருந்துகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்., கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப ஆகியோர்கள் கலந்துகொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
உடன், மண்டல பொது மேலாளர், புறநகர் கிளை மேலாளர், கிருஷ்ணகிரி கோட்ட மேலாளர், அரசு துறை சார்ந்த அலுவலகர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், கழகதொண்டர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
