காய்கறி பிரித்தாளும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.!

கிருஷ்ணகிரி

காய்கறி பிரித்தாளும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், காமன்தொட்டியில் இயங்கி வரும் மின்ட்க்ரோ உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு கனிமங்களும் குவாரிகளும் 2023-24 திட்டத்தின் கீழ், ரூ.9 இலட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி பிரித்தாளும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

உடன் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் திருமதி.இந்திரா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குனர் மேகன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ