12-ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓம் ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில், பைரவ ஜெயந்தி விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையோரம் அமைந்துள்ள மிகவும் 12-ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓம் ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில், பைரவ ஜெயந்தி விழாவினையொட்டி, அகண்ட நாம தீப வழிபாட்டுகளுடன் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே, பெரிய ஏரிக்கரையோரம் 169 கிரம மக்களுக்கு சொந்தமான 12 ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓம் ஸ்ரீ கால பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலின் 815 ஆம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நாள்தோறும் கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பைரவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாபெரும் யாக வேள்வி பூஜை நடைபெற்றது.
இதில் பல்வேறு யாக பூஜைகளுடன் நடைபெற்ற இந்த பூஜையைத் தொடர்ந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வினாயகர், ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்றது,
இதனையடுத்து உலக நன்மை வேண்டி அகண்ட நாம
தீப வழிபாடு நடைபெற்றது. மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பைரவ சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.
இதில் அலங்கரிகப்பட்ட புஸ்ப பல்லாக்கில் ஸ்ரீ கால பைரவர் மற்றும் ஸ்ரீ சீத்த பைரவர் உற்சவ மூர்த்திகளுடன் எழுத்தருளிய நிலையில், திருவீதி உலா நடைபெற்றது.

பாரம்பரிய இசை, மேள தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்களுடன் நடைபெற்ற இந்த திருவீதி உலாவில், மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கால பைரவர் சுவாமியை தரிசனம் செய்தும் வெள்ளை பூசணிக்காய் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் விழாவிற்கு வந்த அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, கால பைரவர் திருக்கோவிலின் நிர்வாகிகள் மற்றும் 165 கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
