புளியங்குடியில் கடையில்  பணம் திருடிய நபர் கைது .!

தென்காசி

புளியங்குடியில் கடையில்  பணம் திருடிய நபர் கைது .!

புளியங்குடியில் கடையில்  பணம் திருடிய நபர் கைது

தென்காசி ஆகஸ்ட் 18 

தென்காசி மாவட்டம்,  புளியங்குடியில் அமைந்துள்ள ஓர் கடையில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி சென்றதாக கடையின் உரிமையாளர் ஷேக் மொய்தீன் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர்  ஷாம்சுந்தர்  மற்றும் சார்பு ஆய்வாளர்  மாடசாமி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மேற்படி கடையில் இருந்து பணத்தை திருடிய ராஜபாளையம், அயன் கொல்லன் கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் பொன்ராஜ் வயது 42 என்ற நபரை ராஜபாளையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் திருடி சென்ற பணம் பறிமுதல் செய்யப் பட்டது.

சிறப்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்த காவல் துறையினரை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி னர்.

செய்தியாளர்

AGM கணேசன்