துத்திகுளம் பள்ளியில் கலை இலக்கிய விழா !

தென்காசி

துத்திகுளம் பள்ளியில் கலை இலக்கிய விழா !

துத்திகுளம் பள்ளியில் கலை இலக்கிய விழா !

தென்காசி நவ 15

தென்காசி மாவட்டம், ஆலங்குளம்வட்டாரம் துத்திகுளம் இந்து நடுநிலை பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நாள் முழுவதும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்ட விழா நடை பெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளி நிர்வாகி ஜேசுராஜ் தலைமை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் சென்னை இனியன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுத்து மொழி தோன்றிய விதங்கள், பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக் கொடுத்து இவ் விளையாட்டின் மூலம் எப்படி பாடங்களை எளிதாக கற்றுக் கொள்வது விளையாட்டுகளின் மூலம் நல் உறவுகளை மாணவர்களிடம் வளர்த்து கொள்வது மாணவர்களிடம் நல்ல ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை வளர்க்கும் கதை சொல்லுதல் போன்ற நிகழ்வுகளை செயல் பாட்டின் மூலம் தொடர்ந்து அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஈடுபட வைத்து செயல்பாட்டோடு செய்து காட்டினார்.

இவ் விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் குழந்தைகள் தின பேச்சு, கதை கூறல், நடனம் போன்ற நிகழ்வுகளையும் நடத்தினர்.

நிகழ்ச்சிகளை ஆசிரியை ரோசி தொகுத்து வழங்கினார்.

இவ் விழாவில் ஆசிரியர்கள் ஜோஸ்பின் தெரசா, அந்தோணிசாமி, ஜோசப் ஸ்டீபன், செல்வம், சத்யா அடைக்கல மேரி, அருள்கனி, முத்துலட்சுமி மற்றும் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை உள்ள 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதியம் சிறப்பான உணவு பாயாசத்துடன் வழங்கப்பட்டது.

செய்தியாளர்

AGM கணேசன்