திராவிட இயக்க முன்னோடி குற்றாலம் க.ராசாராம் பட திறப்பு மற்றும் குடும்பத்திற்கு வைகோ ஆறுதல் .!
தென்காசி
திராவிட இயக்க முன்னோடி குற்றாலம் க.ராசாராம் பட திறப்பு மற்றும் குடும்பத்திற்கு வைகோ ஆறுதல்
தென்காசி, ஆக - 11
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திராவிட இயக்க முன்னோடியும், முன்னாள் திமுக மற்றும் மதிமுக ஒன்றிய செயலாளருமான க.ராசாராம் இல்லத்தில் அவரது திருவுருவப் படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தென்காசி மாவட்ட திராவிட இயக்க முன்னோடியும், திமுக மதிமுக கட்சிகளின் ஒன்றிய செயலாளரும், திமுக தலைவர் கலைஞர் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவருமான குற்றாலம் க.ராசாராம் கடந்த வாரம் உடல் நலக் குறைவினால் காலமானார்.
தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடனடியாக அவரது மகன் இரா.கருணாநிதி (எ) மாரியப்பனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றாலத்தில் உள்ள க. இராசாராம் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப் படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவரது மகன் இரா. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர்களிடம் கடந்த கால பல்வேறு சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசியதோடு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொருளாளர் பொறியாளர் செந்திலதிபன், மதிமுக துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக் குமார், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நெல்லை கே.எம்.ஏ.நிஜாம், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் இல.சுதா பாலசுப்பிரமணியன் குற்றாலம் திமுக செயலாளர் சங்கர் (எ) குட்டி, தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அவை தலைவர் என். வெங்கடேஸ்வரன், மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சுப்பாராஜ், அ.சுப்பையா, மதிமுக பொதுக்குழு உறுப்பினர் ரெங்கசாமி, குற்றாலம் பேரூர் செயலாளர் ஜி.வேல்ராஜ், தென்காசி நகர செயலாளர் கார்த்திக், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் எஸ்.மாரிச்செல்வம், செ.சுப்பிரமணியன், இராஜபாண்டி ஆறுமுகச்சாமி, மேலகரம் பேரூர் செயலாளர் வெங்கட், வனராஜ், குத்தாலிங்கம், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
