தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் .!
தென்காசி
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
தென்காசி ஆகஸ்ட் 17
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர முன்னாள் அதிமுக ஜெ பேரவை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான சுந்தரம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந் நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் கலை கதிரவன் மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி செங்கோட்டை நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், நகர அவைத்தலைவர் காளி, இஞ்சி இஸ்மாயில், திமுக அலுவலக மேலாளர் ராமராஜ் மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், மற்றும் நகர கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
