கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு பள்ளி மாணவன் சிவராம் அபாகஸில் சாதனை.!
தென்காசி
கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு பள்ளி மாணவன் சிவராம் அபாகஸில் சாதனை
தென்காசி டிச 06
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் டெல்லியை தலைமை இடமாக கொண்ட பெரு அபாகஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இன்டர் நேஷனல் அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது நடை பெற்றது,
இதில் பல்வேறு பள்ளியில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
இதில் தென்காசி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான திருநாவுக்கரசு தொடக்க பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவன் சிவராம் மூன்றாம் இடத்தை பிடித்து அபாகஸ் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார்.
இப்பயிற்சி பெறுவதற்கு உதவிய பள்ளியின் முகநூல் நண்பர் மணிகண்டன் முருகேசன் இப் பயிற்சியினை மாணவர்கள் இலவசமாக பெறுவதற்கு முயற்சி எடுத்த புளியங்குடியைச் சார்ந்த நல்லாசிரியர் பழனிக்குமார் பள்ளி நிர்வாகி செல்லம்மாள் பள்ளி கல்வி குழு உறுப்பினர் ரெங்கநாயகி மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,, பெற்றோர்கள், மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
