முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களது 92 வது பிறந்தநாள் விழா .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களது 92 வது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக படத்திற்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் அவர்களின் 92 வது பிறந்தநாள் விழாவையொட்டி, இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர பொறுப்பாளர்கள் அஸ்லாம், வேலுமணி ஆகியோரது தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரிமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சந்தோஷ், மதன், சுனில், புவனா, தேன்மொழி, திமுக மகளீர் அணி புஸ்பா, திருமலை செல்வன், நிர்வாகிகள் கழகத் தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ