தென்காசியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சி.!
தென்காசி
தென்காசியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சி
தென்காசி அக் 30
தென்காசி மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடை பெற்றது. தென்காசி மலையான் தெருவில் அமைந்துள்ள பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது முழு உருவ சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தென்காசி மத்திய மாவட்ட தலைவர்
எஸ் ஆர் அய்யாதுரை தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந் நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரேசபுரம் முருகன், கடையநல்லூர்
நகரத் தலைவர் வெள்ளத்துரை, வட்டாரத் தலைவர்கள் சின்னசாமி, நல்ல சிவன், நகர தமாகா முகம்மது கமாலுதீன், காசிதர்மம் செயலாளர் செல்லையாபாண்டி, மாவட்ட செயலாளர் மூக்கையா, தென்காசி மாவட்ட மகளிர் அணி தலைவி கண்மணி, சிறுபான்மை தலைவர் தாமஸ், தென்காசி நகர செயலாளர் சேகர், துணை தலைவர் குத்தாலிங்கம், மேலகரம் முருகன், தென்காசி கருப்பசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
