துத்திகுளம் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா .!
தென்காசி

துத்திகுளம் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா
கனரா வங்கி சார்பில் ₹27 ஆயிரம் கல்வி உதவி தொகை பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
தென்காசி ஆகஸ்ட் 15
தென்காசி மாவட்டம் துத்திக்குளம் இந்து நடுநிலை பள்ளியில்
இந்திய திருநாட்டின் 79 ஆம்ஆண்டு சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு
வீரகேரளம்புதூர் கனரா வங்கி அதிகாரி சிதம்பரம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராசு முன்னிலை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அந்தோணிசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் கனரா வங்கி அதிகாரி சிதம்பரம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் 79 ஆவது ஆண்டு சுதந்திர தின
விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சு போட்டி,கவிதைப் போட்டி,பாட்டு போட்டி, மாறுவேட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கும் கடந்த முதல் இடைத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வங்கி அதிகாரி சிதம்பரம் பரிசுகளை வழங்கியும் வீரகேரளம் புதூர் கனரா வங்கி சார்பில் ஆண்டுதோறும் ஆதிதிராவிட மாணவிகளுக்கு வழங்கப்படுகிற வித்யா ஜோதி கல்வி உதவித் தொகை 9 பேருக்கு தலா ரூபாய் மூவாயிரம் வீதம் ரூபாய்27 ஆயிரத்தை வழங்கி சுதந்திர தின வாழ்த்து செய்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழா நிகழ்ச்சிகளை பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சத்தியா அடைக்கல மேரி தொகுத்து வழங்கினர். முடிவில் ஆசிரியை ரோசிநன்றி கூறினார்.
இவ்விழாவில் ஆசிரியர்கள் ஜோஸ்வின் தெரசா, பிரான்சிஸ் அந்தோணியம்மாள், ஜோசப் ஸ்டீபன், பதிலிஆசிரியர்கள் அருள்,முத்துலட்சுமி,உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் கனராவங்கி ஊழியர் குமார் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்