கோவில்பட்டியில் கேரம்போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி, மாணவர்கள் சாதனை.!
தென்காசி
கோவில்பட்டியில் கேரம்போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி, மாணவர்கள் சாதனை.!
தென்காசி, நவ - 13
கோவில்பட்டியில் நடைபெற்ற கேரம் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
கோவில்பட்டி காமராஜர் இன்டர்நேஷனல் அகாடமி சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற கேரம் போட்டியில் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை
ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
அப்போட்டியில் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில்
ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
இந்தப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் எஸ்.அரிஃபீன் மற்றும் எம்.மஹசின் மன்ஹா ஆகிய இருவரும் இரண்டு பிரிவிலும் தங்க பதக்கம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதில் டி.சையதுஃராஹிம், கே.ஸ்ரீசரண், எஸ்.தருண், ஏ.ஹர்ஷிதா, எம்.பாத்திமா ரீனா, எஸ்.அஃப்ரா ஜஹான், ஏ.ஏஞ்சலினா டோரா, ஏ.சுருதிகா, ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். ஒற்றையர் பிரிவில் மாணவன் எஸ்.முகமது ஃபர்வேஷ் கலந்து கொண்டு அதில் தங்க பதக்கம் பெற்றார். மேலும் கே. ஸ்ரீசரண், எம்.பாத்திமா ரீனா,
ஏ.சுருதிகா, ஆகியோர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை குத்துக்கல்வலசை
ஆக்ஸ்போர்டு பள்ளி சட்ட ஆலோசகரும் வழக்கறிஞருமான க.திருமலை. பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் இராபர்ட் பெல்லார்மின், முதன்மை முதல்வர் ஆனி மெடில்டா, கேம்பிரிட்ஜ் இண்டர் நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி இயக்குநர் ஜோசப் லியாண்டர், ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் வழக்கறிஞருமான
தி. மிராக்ளின் பால் சுசி மற்றும் சீனியர் முதல்வர் பி.ஜெய ஜோதி பிளாரன்ஸ், முதல்வர் சோ.சௌம்யா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள், உட்பட பலரும் பாராட்டினர்.
செய்தியாளர்
AGM கணேசன்
