கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி சிறப்பாக அமைத்தது குறித்து தேசிய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் கே எம் சந்திர மோகன் பாராட்டி நன்றி .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி சிறப்பாக அமைத்தது குறித்து தேசிய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் கே எம் சந்திர மோகன் பாராட்டி நன்றி .!

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி சிறப்பாக அமைத்தது குறித்து தேசிய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் கே எம் சந்திர மோகன் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

 கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமாக வாக்குச் சாவடிகள் அமைத்தல் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தேர்தல் அலுவலருமான திரு ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் கே எம் சந்திர மோகன் கலந்துகொண்டு பேசும் போது மிகச் சிறப்பாக புதியதாக வாக்குச்சாவடிகள் அமைத்திருப்பது சிறப்பாக இருப்பதும் மக்கள் நலன் கருதி வாக்காளர் நலன் கருதியும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது.

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும்மான தினேஷ் குமார் அவர்களுக்கும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தேர்தல் அலுவலரும்மான ஷாஜகான் அவர்களுக்கும் தேசிய மக்கள் கட்சி சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் கேசவன்குரு,  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் லலித் ஆண்டனி, காங்கிரஸ் கட்சியின் மாநில ஆதிதிராவிட அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, திராவிட முன்னேற்றக் கழக ஊடகப்பிரிவு செயலாளர் விஜய் ராஜசேகரன்,  கிளைச் செயலாளர் ஜெய்சன்,  பாரதிய ஜனதா கட்சி ஊடகப்பிரிவு கார்த்திகேயன், விடுதலை சிறுத்தை கட்சி ஆலப்பட்டி ரமேஷ், கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட அலுவலகர் ராமச்சந்திரன்,  சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சி நகர கமிட்டி கமிட்டி பொறுப்பாளர் முனியன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை கவின்குமார், திரிணாமல் காங்கிரஸ் மாநில செயலாளர் எஸ் ஜெயபிரகாஷ், மாவட்டத் துணைத் தலைவர் தீக்குச்சி என்கிற  ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பேசிய வருவாய் கோட்டாட்சியும் தேர்தல் அல்லது ஷாஜகான் அவர்கள் மேற்கண்ட புதியதாக வாக்குச் சாவடியில் அமைத்தது குறித்து ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் ஏதாவது மாற்றங்கள் இருந்தாலும் தேர்தல் அலுவலர் ஆர்.டி.ஓ என்னிடம் வழங்கலாம் என தெரிவித்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ