தென்காசியில் கொட்டும் மழையில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் .!
தென்காசி
தென்காசியில் கொட்டும் மழையில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
தென்காசி நவ 19
தென்காசியில் 10 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன் பிச்சைக்கனி முருகேஷ் ராஜேந்திரன் ஆரோக்கிய ராசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் மாரிமுத்து, ராஜ்குமார், ஊரக வளர்ச்சித் துறை ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பினர். பல்வேறு துறைகளைச் சார்ந்த நிர்வாகிகள் ராஜ்குமார், மணிகண்டன், ஜான், சேகர், சங்கர நாராயணன், திருப்பதி, வேல்ராஜன், கணபதிராமன், முத்து மாரியப்பன், மோகன்ராஜ், பிரகாஷ், சதீஷ் குமார், ராமமூர்த்தி, பிரேமா, சுப்பிரமணியன், ஆறுமுகசாமி, ஐயப்பன், சம்பத், செல்வகுமார், கிருபா சாலமன் ரமேஷ் தனலட்சுமி மாடக்கண்ணு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஜாக்டோ ஜியோவின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் வெங்கடேஷ் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
