தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் .!

தென்காசி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் .!

தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்

தென்காசி ஆகஸ்ட் 10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ள இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாட்டை முன்னிட்டு தென்காசி மாவட்ட  செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  மாநில பொதுச்செயலாளர் முஜீபுர் ரஹ்மான் மாநில பொருளாளர் காஞ்சி செய்யது இப்ராஹிம் ,மாநில செயலாளர் ஷபீர் அலி ஆகியோர் உரையாற்றினர். 

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் பொருளாளர் அன்வர் சாதிக் துணை தலைவர் அப்துல் பாசித் துணை செயலாளர்கள் ஹாஜா மைதீன் 
 பீர்மைதீன், செய்யதலி முஹமதலி பிலால், அப்துல் பாசித் மருத்துவ அணி செயலாளர் அப்துல்லாஹ் மாணவரணி செயலர் ரபீக் ராஜா மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கனக்கான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

மாவட்ட தொண்டரணி செயலர் ஷேக் தாவூத் தலைமையிலான தொண்டரணியினருடன் தென்காசி அனைத்து கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர். இந்த கூட்டத்தில்
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சார்பில் அக்டோபர் 05 ல் மதுரை வண்டியூரில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாட்டிற்கு தென்காசி மாவட்டம் சார்பில் 25000 (இருபத்தைந்
தாயிரம்) நபர்களை அழைத்து செல்வது என்றும்,நாடாளுமன்ற எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி  இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளது எனும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளதோடு , கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளை திருடி எதிர்கட்சிகள் தோற்பதை உறுதி செய்துள்ளதற்கான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார், இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு கடந்த சில ஆண்டுகளாக நடந்த தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு நீதி விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்