மேலகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் .!

தென்காசி

மேலகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் .!

மேலகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பேரூராட்சி  தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில் 

மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்

தென்காசி ஜூலை 29


தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சி க்கு உட்பட்ட 1 முதல் 7 வார்டுகளுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் மேலகரம், திரிகூடராசப்ப கவிராயர்  திருமண மண்டபத்தில் வைத்து இன்று நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூராட்சி மன்றத்தலைவர் வேணி வீர பாண்டியன் தலைமை வகித்தார். மேலகரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், மேலகரம் பேரூர் திமுக செயலாளார் சுடலை ஆகியோர் முன்னிலை
வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, முகாமினை துவக்கி வைத்து பொது மக்களிடம்  மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) அமானுல்லா, கவுன்சிலர்கள் பூமா சண்முக குட்டி, சுந்தரம் (எ) சேகர், கபிலன், செல்வமணி, தங்கம்மாள், சிங்கத்துரை, திமுக நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி சண்முககுட்டி, ரமேஷ், ஆவீன் முருகன், குமாரவேல், கணேசன், பிச்சைக்கனி, முருகன், குற்றாலம் குத்தாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், மேலகரம் பேரூராட்சி 1 முதல் 7 வார்டுகளுக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன் பெற்றனர்.

செய்தியாளர்

AGM கணேசன்