தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வரும்போது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேட்டி .!
தென்காசி

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வரும்போது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும்
தென்காசியில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் பேட்டி
தென்காசி ஜூலை 2
தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும்போது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தென்காசியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதல்வரின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையின் கீழ் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து அரசின் திட்டத்தால் மக்கள் பயனடைந்து உள்ளனரா மக்களுக்கு வேறு தேவைகள் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்து அவற்றை சரி செய்து கொடுப்பதற்காக இத்திட்டத்தை முதல்வர் துவக்கி இருக்கிறார்.
தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வரும்போது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும். தென்காசி மாவட்டம் இனிமேல் வளர்ச்சி பெறும் கனிம வள பிரச்சனையில் அரசு பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலை இல்லை. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
இதனால் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது விளை நிலம் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தென்காசி மாவட்டத்தின் தேவைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருப்புவனத்தில் விசாரணை கைதி அஜித் குமார் மரணத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மகளிர் முதியோர் உதவித்தொகை கிராமங்களில் உள்ள பிரச்சனைகள் முதலியவற்றை தலைமை கழகத்திற்கு எடுத்துக் கூறி அவற்றிற்கு தேவையான நிவாரணங்களை பெற்றுத்தர இருப்பதாகவும், எதிர்க்கட்சியினரையும் ஆதரிக்கும் வகையில் எங்களது அணுகுமுறை இருக்கும் என அவர் தெரிவித்தார். பேட்டியின்போது
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் எம் எல் ஏ ராஜா, நகர செயலாளர் சாதிர்ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்