முகநூலில் பெண்மையை இழிவு படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ,முத்து செல்வி எஸ்பி யிடம் புகார் மனு .!

தென்காசி

முகநூலில் பெண்மையை இழிவு படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ,முத்து செல்வி எஸ்பி யிடம் புகார் மனு .!

முகநூலில் பெண்மையை இழிவு படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ,முத்து
செல்வி எஸ்பி யிடம் புகார் மனு

தென்காசி ஆகஸ்ட் 18

முகநூலில் பெண்மையை இழிவுபடுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளருமாகிய

எஸ்.முத்து செல்வி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதியில் 2012 முதல் 2016 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, தற்போது திமுகவில் மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறேன்.

தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னுடைய படத்தை மார்பிங் செய்து தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். மேலும் பொதுமக்கள் மத்தியில் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். பெண்மையை இழிவுபடுத்தும் தவறான எண்ணத்துடன் முகநூலில் வதந்திகளை பரப்பி வரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுமாறு கேட்டுக் கொள்வதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட முகநூல் பக்கத்தினை முடக்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்