திமுக நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் நலதிட்ட உதவிகள். !
தென்காசி

அரியப்பபுரத்தில் திமுக நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்
தென்காசி ஜுலை 01
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞரணி சார்பில் அரியப்பபுரத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா காணும் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் ஜே.கே. ரமேஷ் ஏற்பாட்டில் நடை பெற்றது.
இந் நிகழ்வில் நலதிட்ட உதவிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்.உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர் கிருஷ்ணராஜா தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் ஒன்றிய கவுன்சிலர் வளன்ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்