கடையநல்லூரில் ஆன்லைன் மோசடி தடுப்பு விழிப்புணர்வு பேரணி.!

தென்காசி

கடையநல்லூரில் ஆன்லைன் மோசடி தடுப்பு விழிப்புணர்வு பேரணி.!

கடையநல்லூரில் ஆன்லைன் மோசடி தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தென்காசி, டிச - 09

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில்
சோசியல் மனித உரிமைகள் கழகம் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய ஆன்லைன் மோசடி தடுப்பு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது

இந் நிகழ்ச்சிக்கு சோசியல் மனித உரிமைகள் கழகத்தின்  நிறுவனத் தலைவர்    மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில செவிலியர் பிரிவு அமைப்பாளர்  பழனியம்மாள்  முன்னிலை வகித்தார்.
தென்காசி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
அன்வர் இலாஹி வாழ்த்துரை வழங்கினார் .

தென்காசி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  ஜூலியஸ் சீசர் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவழகன், தென்காசி சைபர்கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர்  வசந்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவு தென்காசி மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் அலெக்ஸ் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

உதவி ஆய்வாளர் ரத்தினபால் சாந்தி மற்றும் கடைய நல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி மற்றும் என்.எஸ்
எஸ் மாணவிகள் ஆசிரியைகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடையநல்லூர் முழுவதும் பேரணி சிறப்பாக நடைபெற்றது இறுதியில் அமைப்பாளர் சுரேஷ் என்ற பாலசுப்பிர மணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் 

AGM கணேசன்