செங்கோட்டை வார சந்தையை உள்புற கடைகளுக்கு கொண்டு செல்ல கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு. !
தென்காசி

செங்கோட்டை வார சந்தையை உள்புற கடைகளுக்கு கொண்டு செல்ல கோரி மாவட்ட ஆட்சியருக்கு செங்கோட்டை நகர திமுக செயலாளர் கோரிக்கை மனு
தென்காசி ஜூலை 9
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வார சந்தையை உள்புற கடைகளுக்கு கொண்டு செல்ல கோரி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோருக்கு செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது,
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி
எல்கைக்குட் பட்ட கேசி ரோட்டின் அருகே அமைந்துள்ள புதிய தினசரி சந்தை உள்புறமாக சுமார் 93 கடைகள் அமைக்கப் பட்டுள்ளது மேற்படி வாரச்சந்தை கடைகளை காணொளி காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப் பட்டதை அனைவரும் அறிவார்கள். வாரச் சந்தை
வளாகத்திற்குள் உள்புறமாக அமைந்துள்ள கடைகளுக்குள் சென்று வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்யாமல்
கேசி ரோடு நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் இடையூறாகவும் நெருக்கடியாகவும் உள்புற கடைகள் காலியாக இருக்கும் நிலையில் நெடுஞ் சாலையில் போக்கு வரத்திற்கு மிகவும் இடையூறு செய்து வருகிறார்கள். ஆகையால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதால் ரோட்டோர வியாபாரிகளின் செயல்களை உள்ளாட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத்
துறை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுத்து இடையூறு செய்யும் சாலையோர கடைகளை அப்புறப் படுத்தி உள்புற கடைகளில் வாரச்சந்தை கடைகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
செய்தியாளர்
AGM கணேசன்