இரவோடு இரவாக குண்டர்களை வைத்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே நில உரிமையாளர் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இரவோடு இரவாக குண்டர்களை வைத்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாமஸ் என்பவர் புகார் மனு வழங்கினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.....

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் பின்னமங்கலம் எனும் இடத்தில் ஜாய் அலெக்ஸாண்டர் என்பருக்கு சொந்தமான 65 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பராமரிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ள நிலையில், இந்த நிலத்திற்கு அருகில் ராஜப்பா என்பவரின் நிலம் உள்ளது. இதில் ஜாய் அலெக்ஸாண்டர் நிலத்தில் 10 சென்ட் நிலம் தனக்கு சொந்தம் என கூறி ராஜப்பா பிரச்சனை செய்தார். இந்த 10 சென்ட் நிலத்தில் கிணறு, பம்ப் சென்ட் அறை, CCTV கேமராக்கள், அமைக்கபட்டுள்ளது. இந்த 10 சென்ட் நிலம் எங்களுக்கு சொந்தம் என்று ராஜப்பா தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார்.
இது குறித்து நிலத்தின் உரிமையாளர் ஏற்கனவே காவல் துறையில் புகார் மனு வழங்கி விசாரணை நடைபெற்றது.
அந்த விசாரணையில் ராஜப்பாவிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று முடித்து வைக்கபட்டது. எனினும் உள்ளூர் ஆட்கள் மூலமாக தொடர்ந்து பிரச்சனை செய்த நிலையில் ஜாய் அலெக்ஸாண்டர் தேன்கனிக்கோட்டை முனிசிபல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து மூன்று முறையும் ராஜப்பா ஆஜராகாமல் உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக ராஜப்பா 100 நபர்களின் உதவியுடன் பொக்லைன், டிராக்டரோடு வந்து நிலத்தை சேதப்படுத்தி அங்கிருந்த CCTV கேமராக்களை உடைத்து 10 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்துக் கொண்டனர். மேலும் என்னை கொலை செய்ய விரட்டிய நிலையில் நான் தப்பி ஓடி வந்தேன். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தை சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
