கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில் மிளகாய் வத்தல் யாகம்.!

கிருஷ்ணகிரி

கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில் மிளகாய் வத்தல் யாகம்.!

கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில் மிளகாய் வத்தல் யாகம் : ஏராளமான பக்தர்கள் வழிபாடு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், மோரணப்பள்ளி பகுதியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோயிலில் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மிளகாய் வத்தல் யாகம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷமாக உள்ளது.

அந்த வகையில் இன்று ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில்  கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு திருஷ்டி நீங்கவும், நல்லது நடக்கவும், உலக மக்கள் நலமோடு வாழவும், மிளகாய் வத்தல்களை தீயில் போட்டு யாகம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கோயிலில் ஸ்ரீமகா பிரத்தியங்கிரா அம்மனுக்கும் ராகு கேது சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. 

இந்த கார்த்திகை மாத பௌர்ணமி நாள் யாகத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

செய்தியாளர் 

மாருதி மனோ