தமிழ்நாடு அரசு பட்டதாரி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு பட்டதாரி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு பட்டதாரி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜான் லூர்த் சேவியர், மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், மாவட்ட பொருளாளர் கார்த்திகா, மாவட்ட வேளாண்மை இயக்குனர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண்மை அலுவலர்களுக்கு உடனடியாக ஏழாவது ஊதிய குழுவின் ஊதிய விதத்தில் ஊதியம் வழங்கிட வேண்டும்,
அரசானை எண் 448 யை உடனடியாக வழங்கிட வேண்டும்,
ஆறாவது ஊதிய குழுவின் அடிப்படையிலேயே 15 ஆண்டுகளாக ஊதியம் பெற்று வரும் வேளாண்மை அலுவலர்களுக்கு உடனடியாக 7-வது ஊதிய குழுவின் ஊதியத்தில் ஊதியம் வழங்கி வேளாண்மை துறை தமிழ் நாடு அரசு வேளாண்மை பட்டதாரி சங்கத்தின் உள்ள உறுப்பினர்களின் வாழ்வதாரத்தினை உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட வேளாண்மை துறையினர் கலந்துக்கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
