தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவின் மாநில தலைவரான பவண்குமார் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பாட்டிற்காக துவங்கப்பட்டுள்ள தேங்காய் மற்றும் மாங்காய் கொள்முதல் நிலையத்தை துவக்கிவைத்தார் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டுள்ள தேங்காய் கொள்முதல் நிலையத்தினை துவக்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவண்குமார் தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கட்டுப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம், மிட்டஹள்ளி கிராமத்தில் காங்கிரஸ் தியாகி.பி.லோகநாதன் நினைவாகவும், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் கொள்முதல் நிலையம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னால் மாவட்டத் தலைவரும், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் ஏற்பாட்டில் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவின் மாநில தலைவரான பவண்குமார் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பாட்டிற்காக துவங்கப்பட்டுள்ள தேங்காய் மற்றும் மாங்காய் கொள்முதல் நிலையத்தை துவக்கிவைத்து, அன்னதானம் வழங்கும் பணியினையும் துவக்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார்.... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரு விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் எல். சுப்பிரமணியன் மூலம் துவங்கப்பட்டுள்ளதை துவக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மூலம்மாக தமிழகம் முழுவதும் துடிப்பு மிக்க மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படாது என தெரிகிறது, மேலும் வரும் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் தகுதி வாய்ந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக தமிழகத்தில் கூட்டணி குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த மாநில தலைவர், தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தான் முடிவு செய்யும், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள். கூட்டணி குறித்து அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருவது வாடிக்கைதான். கூட்டணி முடிவு செய்வது அகில இந்திய காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் முரளி, திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் தலைவர் பிரபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் முத்து, காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ராமசந்திரன், கவுன்சிலர் இராதா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
