போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி .!

கிருஷ்ணகிரி

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி .!

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு - உறுதிமொழி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (11.08.2025) போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு எனும் பொருண்மையில் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள்,  போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தனிமனித உடல், உள்ள பாதிப்பு, அதைத் தொடர்ந்து குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பு, சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்பு ஆகியவறையும், இதனால் நாட்டில் ஏற்படும் பொருளாதார இழப்பு, முன்னேற்றத் தடை ஆகியவை பற்றியும் விரிவாக விளக்கிப் பேசினார். 

இதன் மூலம் போதைப் பொருட்கள் பயன்பாடுகளை தடுக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கி அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா ஆகியோரும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ