குரோம்பேட்டையில் கால்வாயில் உள்ள கழிவுகளை வெறும் கைகளால் அகற்றும் தூப்புரவு பணியாளர்கள். !

சென்னை

குரோம்பேட்டையில் கால்வாயில் உள்ள கழிவுகளை வெறும் கைகளால் அகற்றும் தூப்புரவு பணியாளர்கள். 

நெடுஞ்சாலைத் துறையினர் கையுறை, காலணி வழங்காமல் அலட்சியம். 

சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் சிறிதளவு மழை பெய்தாலே 4 அடி வரை மழை நீர் தேங்கி நிற்கும் இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைவர், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். 

இதனை தவிர்க்க மழை நீர் வடிகால்வாய்களை சீர் செய்யும் பணியினை தற்போது நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர். 

இதற்கு துப்புரவு பணியாட்களை நியமித்து கால்வாய் கழிவுகளை அகற்றி வருகின்றனர்.

ஆனால் நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் படி மனித கழிவுகளை மனிதர்களே அள்ளக்கூடாது என்ற விதிமுறை இருந்தும் பணியாளர்கள் வெற்றும் கைகளால் கழிவுகளை அள்ளுகின்றனர் கால்களில் பாதுகாப்பான காலனிகள் இல்லை, இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 

நீதிமன்றம் எவ்வளவு தான் அறிவுறுத்தினாலும் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி அப்பாவி மக்களை கழிவுகளை அள்ளவைக்கும் அவலம் குறையவில்லை.

செய்தியாளர்

        S S K