கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த புத்தாக்க பயிற்சி.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த புத்தாக்க பயிற்சி.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த புத்தாக்க பயிற்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூட்ட கருத்தரங்கு அறையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுறள் தலைமையுரையில், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி அவைகளில் நிவாரணம் பெற தேசிய அளவில் நுகர்வோர் ஆணையத்தின் உதவி தொடர்பு எண் 1915 இல் பயன்படுத்தவும் மற்றும் ஏனைய தொடர்பு எண்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

வரவேற்புரையாக, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை திருமதி.கீதா ராணி அவர்களும்,  வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு,   நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-  2019 குறித்து நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் புத்தாக்க பயிற்சியின் பகுதியாக, நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் ஏஜி.ஜாய் பேசுகையில்.....
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, 1986 சட்டத்தை மாற்றி, நுகர்வோர் உரிமைகளை வலுப்படுத்தி, இ-வணிகம் மற்றும் தவறான விளம்பரங்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துகிறது. இது 2020 ஜூலை 20 முதல் அமலானது.

முக்கிய அம்சங்கள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) உருவாக்கப்பட்டு, தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வணிக நடைமுறைகள், பாதுகாப்பற்ற பொருட்களை திரும்பப்பெறுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இ-வணிக தளங்கள் விற்பனையாளர் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் புகார் தீர்வு அமைப்பை உருவாக்க வேண்டும். பொருள் பொறுப்பு (Product Liability) அறிமுகம் செய்யப்பட்டு, குறைபாட்டுக் காரணமாக ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு வழங்கப்படும். 

புகார் தாக்கல் முறை இ-ஃபைலிங் மூலம் எங்கிருந்தும் புகார் தாக்கல் செய்யலாம்; 21 நாட்களுக்குள் ஏற்பது முடிவு இல்லாவிட்டால் தானாக ஏற்கப்படும். 

மாவட்ட, மாநில, தேசிய ஆணையங்களில் ரூ.5 லட்சம் வரை கட்டணம் இல்லை; வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை. மத்தியஸ்தம் (Mediation) மூலம் விரைவான தீர்வு. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி, நுகர்வோர் குறை தீர் ஆணையங்களின் எல்லை (jurisdiction) பண மதிப்பு (pecuniary jurisdiction) அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது 2021-ல் அறிவிக்கப்பட்ட Consumer Protection (Jurisdiction) Rules மூலம் மாற்றப்பட்டது. 

தற்போதைய (2025 வரை) எல்லைகள் பின்வருமாறு. பண எல்லை விவரங்கள் மாவட்ட நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆணையம் (District Commission):  பொருள்/சேவை மதிப்பு ₹1 கோடி மட்டுமே. மாநில நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆணையம் (State Commission): ₹1 கோடிக்கு மேல் ₹10 கோடிக்குள் மட்டுமே.

தேசிய நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆணையம் (National Commission): ₹10கோடிக்கு மேல். பிராந்திய எல்லை (Territorial Jurisdiction)புகார் தாக்கல் செய்யும் இடம்: நுகர்வோர் வாங்கிய/பயன்படுத்திய இடம், எதிர்தரப்பு (விற்பனையாளர்/சேவை வழங்குபவர்) இருக்கும் இடம் அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்ட இடம் ஆகியவற்றில் ஒன்று.

தமிழ்நாட்டில் உள்ள உங்களுக்கு, உள்ளூர் மாவட்ட ஆணையத்தில் (எ.கா. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம்) ₹1 கோடி வரையிலான குறைகளைத் தொடங்கலாம் கணிப்பு அடிப்படைஎல்லை, பொருள்/சேவைக்கு செலுத்தப்பட்ட தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும்; இழப்பீடு கோரிய தொகையைச் சேர்க்காது (2019 சட்டத்தின் புதிய விதி). ஒப்பந்தங்கள் தொடர்பான புகார்கள் மாநில/தேசிய ஆணையங்களில் மட்டுமே.

இதனை தொடர்ந்து, வந்திருந்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு தேநீர் விருந்தோம்பல், புத்தாக்க பயிற்சியின் சான்றிதழ் மற்றும் மதிய உணவு அளித்து வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல்  நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்தியாளர் 

மாருதி மனோ