கணக்கம்பட்டி  சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி கோ பூஜை.!

கிருஷ்ணகிரி

கணக்கம்பட்டி  சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி கோ பூஜை.!

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜா கடை அருகே அமைந்துள்ள கணக்கம்பட்டி  சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி கோ பூஜை நடைபெற்றது, இதில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜ கடை அருகே அமைந்துள்ள நாகமரத்துபள்ளம், கணக்கம்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் சித்தர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது,

இந்த சித்தர் பீடத்தில் மார்கழி மாத  அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

அமாவாசையையொட்டி நடத்தப்பட்ட இந்த பூஜையின் போது உலக நன்மை வேண்டியும், மக்கள் யாவரும் பசி பட்டினி இன்றி நலமுடன் வாழ வேண்டி நடத்தப்பட்ட இந்த பூஜையில் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டு சித்தர் பீடத்தின் முன்பாக கோ பூஜையினை மேற்கொண்டு ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகளின் சித்தர் பீடத்திற்கு பால், இளநீர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து கணக்கம்பட்டி  ஓம் ஸ்ரீ சத்குரு பழனி சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்தும், அலங்கார தீபாதரனைகள் காண்பிக்கப்பட்டது. அப்போது உலக மக்கள் யாவரும் நலமாகவும், மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

மேலும் இந்த சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை நாகமரத்துபள்ளம், கணக்கம்பட்டி  ஓம் ஸ்ரீ சத்குரு பழனி சுவாமிகள் சித்தர் பீடம் சேவகர்களான மாதேஷ், சவுந்தர், பொன்னுசாமி, திம்மராயன், ஆனந்தராஜ், அனந்தபெருமாள், விக்னேஷ், குமார், மணிகண்டன், வினோதினி லட்சுமி, சித்தர் பீட கோவில் பூசாரி பால்ராஜ் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ