போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் தேசிய குடற்புழு தொற்றை குறைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட 7 லட்சத்து 16 ஆயிரத்து 966 நபர்களுக்கு குடற் புழு நீக்க மாத்திரையை மாவட்ட ஆடசியர் வழங்கி குடற்புழு தொற்றை குறைத்து வளமான எதிர்காலத்திற்கு வித்திடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் தேசிய குடற்புழு தொற்றை குறைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது ,
மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது கல்லூரி மாணவர்களின் சார்பில் போதைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடற்புழுவினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடும் வகையில் மாவட்டஆட்சியர் தினேஷ்குமார் தேசிய குடற் புழு தினத்தினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 வயது முதல் 30 வயசு வரை உள்ள மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 7 லட்சத்து 16 ஆயிரத்து 966 பேருக்கு குடற்புழு மாத்திரையான ஆல்பெண்டாசெல் மாத்திரையை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி குடற்புழு தொற்றை குறைத்து வளமான எதிர்காலத்திற்கு வித்திடுவோம் என உறுதிமொழியை வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்து துறை அதிகாரிகளும் குடற்புழு தொற்றினை குறைத்திடுவோம் என்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ