கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 கீழ் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்.!

கிருஷ்ணகிரி

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 கீழ் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 கீழ் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூந்து நிலையம்  அமைக்கும் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன், MLA, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து இனிப்புகளை வழங்கி துவக்கி வைத்தனர்.

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ