தென்காசியில் கணவன் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி ஜமீலா பேகம் புகார் மனு .!

தென்காசி

தென்காசியில் கணவன் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி ஜமீலா பேகம் புகார் மனு .!

தென்காசியில் கணவன் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி ஜமீலா பேகம் புகார் மனு.!

தென்காசி டிச 15

தென்காசி சொர்ணபுரம் தெருவை சேர்ந்த சித்திக் மனைவி ஜமீலா பேகம் தனது கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் புகார் மனுவினை  அளித்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, எனது கணவர் முகமது ஹசன் சித்திக் கடந்த 10 வருடங்களாக எமது பகுதியில் மரம் நடுதல், சுற்றுச் சூழலை பாதுகாத்தல், ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்விஉபகரணங்கள் வழங்குதல், போன்ற பல்வேறு சமூக நல பணிகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார். எங்கள் பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில் ஹைதர் அலி என்பவர் தொடர்ந்து ரேசன் பொருட்களை கடத்துதல் போன்ற சமூக விரோத செயல்களை செய்து வருவதை தட்டி கேட்ட காரணத்தினால் கடந்த டிச 2ம் தேதி எனது கணவரை வழிமறித்து ஹைதர் அலி மற்றும் அவருடன் இணைந்து ஆறு பேர் கொண்ட சமூக விரோத கும்பல்கள் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் நோக்கத்தோடு கொடூர தாக்குதல் நடத்தியதில் எனது கணவருக்கு இரு கால்கள் மற்றும் வலது கை முழுவதுமாக எலும்பு முறிவு மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்து பிறர் துணை இல்லாமல் தன்னுடைய சுய தேவைகளை நிறை வேற்ற முடியாமல் மருத்துவ
கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

சம்பவம் நடந்து 13 நாட்கள் கடந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரை தவிர மற்றவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்பட வில்லை. மேலும் தலைமறைவு குற்றவாளிகளால் எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என பயந்து வெளியில் செல்ல முடியாமல் குழந்தைகளுடன் சிரமத்தை சந்தித்து வருகிறேன்.

ஆகவே சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் எனது கணவருக்கு உரிய நீதி கிடைக்கவும்  அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த மனுவினை ஜமீலா பேகம் தெரு பொது மக்கள்,உறவினர்கள், பெண்கள், உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்களுடன் சென்று  அளித்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்