தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா கிருஷ்ணகிரியில் உள்ள விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்ட கருவூல அலுவலர் கே.கலைச்செல்வி, மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர்.ஞானமீனாட்சி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மாவட்டத் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்பு உரை ஆற்றினார்.
மாவட்டச் செயலாளர் பி.முருகன் துவக்கவுரையும், மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசலு கருத்துறையும், வழங்கினார்கள்.
இந்த ஓய்வூதர் தின விழாவில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 7850 ரூபாய் வழங்க வேண்டும், 70 வயதை கடந்தவர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்க வேண்டும், எட்டாவது ஊதிய குழுவில் பென்ஷனர்களுக்கு வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
விழாவிற்கு மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர்களான திருநாவுக்கரசு, கெம்பன்னா, மாரியப்பன், அஞ்சல் துறை தலைவர் விஜய ராஜன், போக்குவரத்து துறை குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் நன்றியுரையாற்றினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
