தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்த நாள் வாழ்த்து. !

கிருஷ்ணகிரி

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்த நாள் வாழ்த்து. !

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் 30.11.25 ல் பிறந்தநாள் காணும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகனுக்கு பிறந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

கிருஷ்ணகிரியில் நவம்பர் 30 தேதி ஞாயிற்றுக்கிழமை
விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ்நாடு அரசு முன்னாள் பொது வினியோக திட்ட ஆலோசனைக்குழு உறுப்பினருமான டாக்டர் சந்திரமோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

இவ்விழா கிருஷ்ணகிரி, பழையப்பேட்டை, பேருந்து நிலையம் அருகில் உள்ள முருகன் மஹாலில் நடைபெற உள்ள இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெ.பி.ஜெயபிரகாஷ் அவர்களின் இல்லத் திருமண விழா தேவராஜ் மஹாலில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன்,  ஜி.கே.வாசன் அவர்களை நேரில் சந்தித்து இறையன்பு அவர்கள் எழுதிய நூலினை வழங்கி விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் மற்றும் தன்னுடைய பிறந்தநாள் விழா அழைப்பிதழினை வழங்கினார்.

அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு தனது பிறந்தநாள் நல்வாழ்த்தினை டாக்டர் சந்திரமோகனுக்கு தெரிவித்தார்,
அப்போது நுகர்வோர் அமைப்பினை சார்ந்த ஜெய்சன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ