ரயில் பாதையின் அடியில் தள்ளப்பட்ட மிகப்பெரிய "வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் பெட்டி (RCC)” அமைத்து ஆசிய சாதனை.!

கிருஷ்ணகிரி

ரயில் பாதையின் அடியில் தள்ளப்பட்ட மிகப்பெரிய "வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் பெட்டி (RCC)” அமைத்து ஆசிய சாதனை.!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஊராட்சி ஒன்றியம், கார்கொண்டப்பள்ளியில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் இந்தியாவின் மான்டேகார்லோ லிமிடெட் இணைந்து கெலமங்கலம் மற்றும் ஒசூர் நிலையங்களுக்கு இடையில், ரயில் பாதையின் அடியில் தள்ளப்பட்ட மிகப்பெரிய "வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் பெட்டி (RCC)” அமைத்து ஆசிய சாதனை புத்தகம் (Asia Book of Records) மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் (India Book of Records) இடம் பெற்றதற்கான சான்றிதழ்கள் பெற்றமைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து, கௌரவித்தார்.

உடன் ஒசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி.,இ.ஆ.ப., மாண்டேகார்லோ நிறுவன தலைமை திட்ட மேலாளர் ஆர்.பி.கிசோர் நாயக், மேலாண்மை இயக்குனர் பீர்ஜேஸ் பட்டேல், முதுநிலை துணைத்தலைவர் சசி பூசன் சிங் மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ