குற்றாலம் பேரூர் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி .!
தென்காசி
குற்றாலம் பேரூர் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி
தென்காசி நவ 27
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூர் திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலினின் 49 வது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு குற்றாலம் பேரூர் திமுக செயலாளர் சங்கர் என்ற குட்டி தலைமை வகித்து, குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி திருக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு பக்தர்கள் சுமார் 300 நபர்களுக்கு அன்னதானம்வழங்கப் பட்டது.
இந் நிகழ்ச்சியில் பேரூர் திமுக துணைச் செயலாளர் மாரியப்பன் என்ற கருணாநிதி மாவட்ட தொண்டர் அணி துணைஅமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், அறங்காவலர் வீரபாண்டியன், காசிமேஜர்புரம் நீலகண்டன்,வார்டு செயலாளர்கள் சக்தீஸ் கணேஷ், திருமலை குமார், பால்ராஜ், அனந்த நாராயணன், வள்ளி நாயகம், குத்தாலிங்கம், பேரூர் வர்த்தக அணி சுப்புராஜ்,ஒன்றிய பிரதிநிதி ராமர்,எட்டாவது வார்டு பரமசிவன், ஐந்தாவது வார்டு மந்திரம், கலை இலக்கிய அணி பண்டார சிவன், ஒன்றிய வர்த்தக அணி முத்துக்குமார், இளைஞர் அணி மனோ, தொழிலதிபர் பூபதி பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
