தென்காசி பாலியல் துன்புறுத்தல் - தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி .!

தென்காசி

தென்காசி பாலியல் துன்புறுத்தல் - தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி .!

தென்காசி பாலியல் துன்புறுத்தல் - தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்.

தென்காசி, நவ -09

தென்காசியில் நடைபெற்ற பாலின சமத்துவம். பெண் அதிகாரம் அளித்தல், பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜோதிராமன் கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசினார்.

தென்காசி இசக்கி மஹாலில் பாலின சமத்துவம். பெண் அதிகாரம் அளித்தல், பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  எம்.ஜோதிராமன், தென்காசி மாவட்ட முதன்மை நீதிபதி பி.ராஜவேல், மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபிதா, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

 இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜீலியஸ் சீசர், முதன்மை மாவட்ட நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.கவிதா, மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை பாதுகாப்பு அலுவலர் ஜெ.புனிதா, ஆரோக்கிய செல்வி, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி பேமதிவதனா, குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் எஸ் .அமிர்தவல்லி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் குட்டி(எ) மருதப்பன், சு.வேலுச்சாமி, முருகன், மற்றும் தென்காசி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஆர். மாடக்கண்ணு, பார் அசோசியேசன் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சிவக்குமார், மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கார்த்திக்குமார்,
ஜெபா, கைலாசம், கண்ணன்,  மாடசாமி பாண்டியன், நிஷாந்த் கண்ணன், மஞ்சு கிருஷ்ணா, சினு சைபினி, ஆலடி மானா, ஜான் தாமஸ் கேண்டர், ராஜா, சந்திர போஸ், வெனிஸ் குமார், முருகேசன், மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்