தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் .!
தென்காசி
தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம்
தென்காசி டிச 16
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தென்காசி மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கான பணி நிறைவு பாராட்டு விழா தென்காசி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் சுப்பிர மணியன் தலைமை வகித்தார்.மாநில செயலாளர் சமுத்திரம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட பொதுக் குழுவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்த குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மாநில துணைத் தலைவர்
அருணாச்சலம், திருநெல்வேலி
மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன்,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பணி நிறைவு பெற்ற நிர்வாகிகள் பேப்பர் ஆனந்தன், ராமசாமி ஆகியோரை பாராட்டி நினைவு பரிசினை மாநில தலைவர் வழங்கினார்.
நல்நூலகர் விருது பெற்ற சிவக்குமார்
பழனிஸ்வரன் ஆகியோரையும் மாநில தலைவர் பாராட்டி சால்வை அணிவித்தார்,
மாவட்ட நிர்வாகிகள் அந்தோணி ராஜ் , வெற்றி வேல் , சுரேஷ் வட்டக்கிளை தலைவர்கள் வெள்ளத்துரை, பழனீஸ்வரன், முத்து மீராசா,
லட்சுமண ராஜா, மகளிர் அணி சார்பில் மேடை ஈஸ்வரி அனுஷா கோரிக்கை குறித்து பேசினர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் ராம் பிரசாத் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
