சுரண்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா இலவச கண் சிகிச்சை முகாம் .!
தென்காசி

சுரண்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா இலவச கண் சிகிச்சை முகாம்
தென்காசி ஜுலை 27
சுரண்டையில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, எஸ் பி என் புளுமெட்டல் & வள்ளி முருகன் ஹைடெக் சேம்பர் பிரிக்ஸ் ஏற்பாட்டில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் முரளிராஜா தலைமையில் சுரண்டை ஜெயேந்திரா பள்ளியில் வைத்து நெல்லை அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை சுரண்டை நகர்மன்ற சேர்மன் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதில் காங்கிரஸ் சுரண்டை நகர தலைவர் ஜெயபால் மாவட்ட பொதுச் செயலாளர் தேவேந்திரன்
கந்தையா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்