பெண்களிடம் ஆணுறுப்பை காட்டி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.!
சென்னை
வேளச்சேரி பேருந்து நிலையத்தில் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வந்தனர்.
சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பேருந்திற்காக காத்திருந்த பெண்களிடம் இளைஞர் ஒருவர் ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த பெண்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த பெண்கள் அவரை வீடியோ எடுத்த பின் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்
வேளச்சேரியில் ஆண் நபர் ஒருவர் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டி ஆபாச செய்கையில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
வேளச்சேரி போலீஸாரை அவரை தேடி வந்த நிலையில் அந்த நபர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் ( 33 ) என்பது தெரிய வந்துள்ளது.புகாரின் அடிப்படையில் போலீசார் மகேஷை கைது செய்தனர்.
செய்தியாளர்
S S K
