அஜித்குமார் லாக்கப் மரணம் தொடர்பாக தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நல சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி. !

சென்னை

வேளச்சேரியில் திருப்புவனம் அஜித்குமார் லாக்கப் மரணம் தொடர்பாக தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நல சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி. 

சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் லிங்க பெருமாள் தலைமையில் காவலாளி திருப்புவனம் அஜித்குமார் லாக்கப் மரணம் தொடர்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

மேலும் இந்த சம்பவம் மனித உரிமை மீறல் என்றும் இனி இதுபோனற சம்பவம் நிகழ கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். 

இதற்கிடையே மனித உரிமை என எழுதி இருந்த நகலை எரித்து லாக்கப் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

செய்தியாளர்

       S S K